Isaiah 62:2
தேசங்கள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; யெகோவாவுடைய வாய் சொல்லும் புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3நீ யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
Cross References
Genesis 17:5இனி உன் பெயர் ஆபிராம் + 17:5 ஜாதிகளின் தகப்பன் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும்.
Genesis 32:28அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் + 32:28 தேவனோடு போராடினவன் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.
Psalms 138:4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் 1 உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 1
Isaiah 49:23ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் வளர்க்கும் தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.
Isaiah 60:1எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது.
Isaiah 60:16நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, யெகோவாவாகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய்.