Isaiah 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 1:1ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
2 Kings 22:10எழுத்தனாகிய சாப்பான் மேலும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவிற்கு முன்பாக வாசித்தான்.
2 Kings 22:19நான் இந்த இடத்திற்கும் அதின் குடிமக்களுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ யெகோவாவுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுததால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
Ezra 9:4அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தின் காரணமாக இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற அனைவரும் என்னுடன் கூடிக்கொண்டார்கள்; நானோ மாலை பலி செலுத்தப்படும்வரை திகைத்தவனாக உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
Psalms 34:18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, 1 நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். 1
Psalms 51:19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய 1 நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; 1 அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.