Jeremiah 13:16
அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
15நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; யெகோவா விளம்பினார்.
Cross References
Joshua 7:19அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைசெய்து, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு மறைக்காதே என்றான்.
Psalms 29:2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; 1 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள். 1
Psalms 96:7மக்களின் வம்சங்களே, 1 யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1
Ecclesiastes 11:8மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.
Isaiah 5:30அந்நாளில், கடல் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாக இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோகும்.
Isaiah 59:9ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.