எரேமியா 37:10
உங்களுடன் போர்செய்கிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் தோற்கடித்தாலும், மீந்தவர்கள் எல்லோரும் காயம்பட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11பார்வோனின் படை வருகிறதென்று, கல்தேயருடைய படை எருசலேமைவிட்டுப் போனபோது,
Cross References
Leviticus 26:36உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
Isaiah 13:15பிடிபட்ட எவனும் குத்தப்பட்டு, அவர்களைச் சேர்ந்திருந்த எவனும் பட்டயத்தால் விழுவான்.
Isaiah 30:17நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்கும்வரை, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
Jeremiah 37:8கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.
Jeremiah 50:45ஆகையால் யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்திற்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்களுடைய தங்குமிடங்களை அவர் பாழாக்குவார்.
Joel 2:11யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? 1 மனந்திரும்ப அழைப்பு