Joel 2:11
யெகோவா தமது படைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய முகாம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; யெகோவாவுடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாக இருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? 1 மனந்திரும்ப அழைப்பு
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Samuel 22:14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 1
Psalms 46:6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; 1 அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. 1
Isaiah 7:18அந்நாட்களிலே, யெகோவா எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் சைகைகாட்டி அழைப்பார்.
Isaiah 42:13யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார்.
Jeremiah 30:7ஐயோ, அந்த நாள் பெரியது; அதற்கு இணையான நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி காப்பாற்றப்படுவான்.
Ezekiel 22:14நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.