எரேமியா 48:33
பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போனது; திராட்சைரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயச்செய்தேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 5:10பத்து ஏர் நிலமாகிய திராட்சைத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்.
Isaiah 9:3அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
Isaiah 24:7திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள்.
Jeremiah 25:9இதோ, நான் வடக்கேயிருக்கிற எல்லா வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்திற்கு விரோதமாகவும், இதின் குடிமக்களுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா மக்களுக்கும் விரோதமாகவும் வரச்செய்து, அவைகளை அழிவுக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய பழி போடுதலாகவும், நிலையான வனாந்திரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Joel 1:12திராட்சைச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதுளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய தோட்டத்தின் செடிகள் எல்லாம் வாடிப்போனது; சந்தோஷம் மனுக்குலத்தைவிட்டு ஒழிந்துபோனது. 1 தேசத்திற்காகப் புலம்புதல்
Haggai 2:16அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.