எரேமியா 49:5
இதோ, உன் சுற்றியுள்ள அனைவராலும் உன்மேல் பயத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியிலே துரத்தப்படுவீர்கள்; ஓடுகிறவர்களை திரும்பச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Joshua 2:9யெகோவா உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், தேசத்து மக்கள் எல்லோரும் பயந்துபோனார்களென்றும் அறிவேன்.
2 Kings 19:7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
Proverbs 28:1ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; 1 நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். 1
Jeremiah 6:25வயல்வெளியில் புறப்படாதிருங்கள்; வழியிலும் நடக்காதிருங்கள்; சுற்றிலும் எதிரியின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
Jeremiah 20:4மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.
Jeremiah 48:41கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளில் மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும்.