Joel 3:2
நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 20:26நான்காம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்று பெயரிட்டார்கள்.
Jeremiah 12:14இதோ, நான் என் மக்களாகிய இஸ்ரவேலுக்குச் சொந்தமாகக் கொடுத்த என் பங்கைத் தொடுகிற கொடியவரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று யெகோவா அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இல்லாமல் பிடுங்கிப்போடுவேன்.
Jeremiah 49:1அம்மோன் மக்களைக்குறித்துக் + 49:1 லோத்தின் மக்கள் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா + 49:1 அவர்கள் ராஜாகாத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்?
Ezekiel 35:10இரண்டு இனத்தார்களும் இரண்டு தேசங்களும் கர்த்தரிடத்தில் இருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சொந்தமாக்கிக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
Ezekiel 38:22கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனுடன் வழக்காடி, அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடன் இருக்கும் திரளான மக்களின்மேலும் வெள்ளமாக அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் பெருகச்செய்வேன்.
Joel 3:12மக்கள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள மக்களை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.