John 19:11
இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 9:14விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன்.
Psalms 39:9நீரே இதைச் செய்தீர் என்று நான் 1 என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். 1
Jeremiah 27:5நான் பூமியையும் மனிதனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் கரத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு விருப்பமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
Daniel 4:17உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனிதர்களில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று மனுக்குலம் அறிந்து கொள்வதற்காக காவலாளர்களின் அறிக்கையினால் இந்தக் காரியமும், பரிசுத்தவான்களின் வாய்மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.
Daniel 4:32மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது.
Daniel 5:21அவர் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலானது; காட்டுக்கழுதைகளோடே வசித்தார்; உன்னதமான தேவன் மனிதர்களின் ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளும்வரை மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.