Lamentations 2:13
மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? 1 உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? 1 மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, 1 நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? 1 உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, 1 உன்னைக் குணமாக்குகிறவன் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 60:2பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; 1 அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது. 1
Jeremiah 8:22கீலேயாத்திலே பிசின் தைலமருந்து இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் மக்களாகிய மகள் சுகமடையாமற்போனாள்?
Jeremiah 14:17என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
Jeremiah 30:12யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாகவும் இருக்கிறது.
Jeremiah 30:15உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? மிகுதியான உன் அக்கிரமத்தினாலும் பெருகிப்போன உன் பாவங்களினாலும் இப்படி உனக்குச் செய்தேன்.
Lamentations 1:12வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, 1 இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? 1 யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் 1 எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். 1