Luke 15:22
அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
23கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
Cross References
Genesis 41:42பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,
Esther 3:10அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,
Psalms 18:33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, 1 உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார். 1
Psalms 132:9உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும். 1
Song of Solomon 7:1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் 1 மிகவும் அழகாக இருக்கிறது; 1 உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க 1 தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 1
Ezekiel 16:9நான் உன்னைத் தண்ணீரால் கழுவி, உன்னை இரத்தம் நீங்க குளிக்கவைத்து, உனக்கு எண்ணெய் பூசி,