Mark 13:8
மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 15:6தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார்.
Isaiah 19:2சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன்.
Jeremiah 4:31கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ, கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
Jeremiah 13:21அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும், தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்கப்படுத்தினாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
Jeremiah 25:32இதோ, தேசத்திலிருந்து தேசத்திற்கு தீமை பரவும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புயல் எழும்பும்.
Jeremiah 50:43அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.