Mark 8:36
மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul?
In Context
37மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்?
Cross References
Job 2:4சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான்.
Psalms 49:17அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; 1 அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 1
Malachi 3:14தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்?
Matthew 16:26மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
Luke 12:19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Romans 6:21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தெரிகிற காரியங்களினாலே அந்தகாலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.