Matthew 19:22
அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But when the young man heard that saying, he went away sorrowful: for he had great possessions.
In Context
Cross References
Psalms 17:14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், 1 இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் 1 உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; 1 அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; 1 அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, 1 தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள். 1
Daniel 6:14ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் கலக்கமடைந்து, தானியேலைக் காப்பாற்றுவதற்கு அவன்மேல் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிப்பதற்காக சூரியன் மறையும்வரை முயற்சிசெய்துகொண்டிருந்தான்.
Matthew 13:22முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.
Matthew 16:26மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
Mark 10:22அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
John 19:12அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.