Numbers 16:30
யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
Cross References
Job 31:3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், 1 அக்கிரமக்காரருக்கு தண்டனையுமல்லவோ கிடைக்கும். 1
Isaiah 28:21யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
Isaiah 45:7ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
Jeremiah 31:22முறைகெட்டுப்போன மகளே, எதுவரை விலகித் திரிவாய்? யெகோவா பூமியில் ஒரு புதுமையை உண்டாக்குவார், பெண்ணானவள் ஆணைச் சூழ்ந்துகொள்ளுவாள்.