Numbers 18:15
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாக இருக்கும்.
Cross References
Exodus 13:2“இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.
Exodus 13:13கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; + 13:13 13:13 கழுதை பலி அங்கீகரிக்கப்படாது மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்.
Exodus 22:29முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.
Leviticus 27:26“முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.
Numbers 3:46இஸ்ரவேல் மக்களுடைய முதற்பேறுகளில் லேவியர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்து, மீட்கப்படவேண்டிய 273 பேரிடத்திலும்,
2 Kings 12:5ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.