Numbers 22:32
யெகோவாவுடைய தூதனானவர் அவனை நோக்கி: “நீ உன்னுடைய கழுதையை இதோடு மூன்றுமுறை அடித்தது ஏன்? உன்னுடைய வழி எனக்கு மாறுபாடாக இருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:2அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
Numbers 22:22அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.
Numbers 22:35யெகோவாவுடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: “அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும்” என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.
Deuteronomy 25:4“போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.
Psalms 145:9யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; 1 அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது. 1
Proverbs 14:2நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; 1 தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். 1