The Bible Software
bible.softwareNumbersNumbers 26 › Numbers 26:20

Numbers 26:20

யூதாவுடைய மற்ற மகன்களின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியர்களின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியர்களின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராகியர்களின் குடும்பமுமே.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And the sons of Judah after their families were; of Shelah, the family of the Shelanites: of Pharez, the family of the Pharzites: of Zerah, the family of the Zarhites.

In Context

19யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.

21பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.

Read all of Numbers 26

Cross References

Genesis 38:11அப்பொழுது யூதா, தன் மகனாகிய சேலாவும் அவனுடைய சகோதரர்கள் இறந்ததுபோல இறப்பான் என்று பயந்து, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: “என் மகனாகிய சேலா பெரியவனாகும்வரைக்கும், நீ உன் தகப்பன் வீட்டில் விதவையாகத் தங்கியிரு” என்று சொன்னான்; அதன்படியே தாமார் போய்த் தன் தகப்பனுடைய வீட்டிலே தங்கியிருந்தாள்.

Genesis 38:26யூதா அவைகளை அடையாளம்கண்டு: “என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் மகனாகிய சேலாவுக்குக் கொடுக்காமற்போனேனே” என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

Ruth 4:18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.

1 Chronicles 4:21யூதாவின் மகனாகிய சேலாகின் மகன்கள்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேஷாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,

Nehemiah 11:4எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும்,

Nehemiah 11:24யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Numbers 26:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Numbers 26:19Numbers 26Numbers 26:21 →