Numbers 6:5
“அவன் நசரேய விரதமிருக்கும் நாட்களெல்லாம் சவரகன் கத்தி அவனுடைய தலையின்மேல் படக்கூடாது; அவன் யெகோவாக்கென்று விரதமிருக்கும் காலம் நிறைவேறும்வரை பரிசுத்தமாக இருந்து, தன்னுடைய தலைமுடியை வளரவிடவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
6அவன் யெகோவாவுக்கென்று விரதமிருக்கும் நாட்களெல்லாம் யாதொரு பிரேதத்தின் அருகில் போகக்கூடாது.
Cross References
Judges 13:5நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெறுவாய்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படவேண்டாம்; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் + 13:5 எண்ணாகமம் 6 அதிகாரத்தை பார்க்க; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றத் தொடங்குவான் என்றார்.
Judges 16:19அவள் அவனைத் தன்னுடைய மடியிலே தூங்கவைத்து, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைத்து, அவனை பலவீனப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கியது.
Lamentations 4:7அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், 1 பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், 1 இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். 1