Proverbs 30:17
தகப்பனைப் பரியாசம்செய்து, 1 தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், 1 கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, 1 என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. 1
Cross References
Genesis 9:21அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் ஆடை விலகிப் படுத்திருந்தான்.
Deuteronomy 21:18“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,
Deuteronomy 28:26உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுபவர்கள் இல்லாதிருப்பார்கள்.
2 Samuel 18:9அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
2 Samuel 21:10அப்பொழுது ஆயாவின் மகளான ரிஸ்பாள் சணல்நூல் துணியை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாட்களின் ஆரம்பம் முதல் வானத்திலிருந்து அவர்கள்மேல் மழைபெய்யும்வரை பகலில் ஆகாயத்துப் பறவைகளோ இரவில் காட்டுமிருகங்களோ அந்த உடல்களைத் தொந்தரவு செய்யாதபடி பார்த்துவந்தாள்.
Proverbs 23:22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; 1 உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. 1