வெளிப்படுத்தின விசேஷம் 4:6
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக் கல்லைப்போல கண்ணாடிக் கடல் இருந்தது; அந்தச் சிங்காசனத்தின் நடுவிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன, அவைகள் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Read all of வெளிப்படுத்தின விசேஷம் 4
Cross References
Exodus 38:8ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாக பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான். 1 ஆசரிப்பு கூடாரத்தின் பிராகாரம் உண்டாக்கப்பட்டது. யாத்திராகமம். 27:9-19.
Job 28:17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; 1 பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. 1
Ezekiel 10:12அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
Revelation 4:8அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: 1 “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் 1 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
Revelation 5:14அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
Revelation 7:17சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, 1 இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; 1 தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.