ரோமர் 10:19
இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: 1 என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; 1 புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 115:5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; 1 அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 1
Jeremiah 10:8அவர்கள் அனைவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
Hosea 2:23நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.
Romans 3:26கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
Romans 11:11இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
1 Corinthians 1:12உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.