சகரியா 6:12
அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Ezra 3:8அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவும், மற்றும் அவர்களுடைய சகோதரர்களாகிய ஆசாரியர்களும் லேவியர்களும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பம்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
Psalms 80:15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். 1
Isaiah 11:1ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
Isaiah 53:2இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
Jeremiah 33:15அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதிற்கு நீதியின் கிளையை முளைக்கச்செய்வேன்; அவர் பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
Micah 5:5இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பர்களையும் மனிதர்களில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.