Acts 4:11
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
This is the stone which was set at nought of you builders, which is become the head of the corner.
In Context
Cross References
Psalms 118:22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, 1 மூலைக்குத் தலைக்கல்லானது. 1
Isaiah 28:16ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான் + 28:16 பார்க்க சங்கீதம் 118:22-23, ரோமர் 9:33, 10:11, 1 பேதுரு. 2:6.
Ezekiel 2:6மனிதகுமாரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்களுடைய வார்த்தைகளுக்கும் பயப்படவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்செய்தாலும், நீ அவர்களுடைய வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்திற்குக் கலங்காமலும் இரு; அவர்கள் கலகமக்கள்.
Ezekiel 3:18இறக்கவே இறப்பாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கமான வழியில் இல்லாதபடி எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடு காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே இறப்பான்; அவனுடைய இரத்தப்பழியையோ உன்னிடம் கேட்பேன்.
Zechariah 3:9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Matthew 21:42இயேசு அவர்களைப் பார்த்து: 1 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே 1 மூலைக்குத் தலைக்கல்லானது, 1 அது கர்த்தராலே ஆனது, 1 அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று 1 நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?