Amos 9:13
இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:5திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.
Psalms 97:5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, 1 சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது. 1
Isaiah 55:13முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு மரம் முளைக்கும்; நெருஞ்சி முட்செடிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது யெகோவாவுக்குப் புகழ்ச்சியாகவும், அழியாத நிலையான அடையாளமாகவும் இருக்கும்.
Hosea 2:21அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும்.
Joel 3:20ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்.
John 4:35அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.