Amos 9:12
அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 27:29மக்கள் உன்னைச் சேவித்து 1 தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; 1 உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; 1 உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; 1 உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், 1 உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
Numbers 24:17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; 1 அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; 1 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், 1 ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; 1 அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, 1 சேத் சந்ததி + 24:17 கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும். 1
Psalms 60:8மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், 1 ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; 1 பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். 1
Isaiah 14:1யெகோவா யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியிருக்கச்செய்வார்; அந்நியரும் அவர்களுடன் சேர்ந்து, யாக்கோபின் வம்சத்துடன் இணைந்து கொள்வார்கள்.
Isaiah 63:19நாங்களே + 63:19 ஆதியிலிருந்து உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.
Jeremiah 14:9நீர் சோர்ந்துபோன மனிதனைப்போலவும், காப்பாற்ற முடியாத பலசாலியைப்போலவும் இருப்பானேன்? யெகோவாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய பெயர் எங்களுக்குச் சூட்டப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப் போகாதிரும்.