கொலோசெயர் 1:17
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he is before all things, and by him all things consist.
In Context
Cross References
Psalms 75:3பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; 1 அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) 1
Isaiah 43:11நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
Micah 5:2எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
John 5:17இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார்.
John 17:5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 1 இயேசு தம்முடைய சீடர்களுக்காக ஜெபித்தல்
1 Corinthians 8:6பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம்.