Daniel 9:16
ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:39உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள்.
1 Kings 9:7நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள்.
Psalms 31:1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; 1 உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 1
Psalms 71:2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, 1 என்னைக் காத்தருளும்; 1 உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 என்னைக் காப்பாற்றும். 1
Psalms 87:1அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது. 1
Psalms 106:6எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து, 1 அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம். 1