Deuteronomy 24:13
அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,
Cross References
Exodus 22:25உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.
Deuteronomy 6:25நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
Deuteronomy 24:15அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Job 29:11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; 1 என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 1
Job 31:16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1
Psalms 112:9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1