Deuteronomy 28:32
உன்னுடைய மகன்களும் மகள்களும் அந்நிய மக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 21:29ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன்னுடைய மகன்களையும் தன்னுடைய மகள்களையும் எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.
Deuteronomy 28:41நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
2 Chronicles 29:9இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
Job 11:20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.
Job 31:8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; 1 என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. 1
Psalms 119:82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, 1 உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது. 1