உபாகமம் 32:9
யெகோவாவுடைய மக்களே அவருடைய பங்கு; 1 யாக்கோபு அவருக்குச் சொந்தமானவர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the LORD’S portion is his people; Jacob is the lot of his inheritance.
In Context
Cross References
Exodus 15:16பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். 1 யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், 1 நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், 1 அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் 1 கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள். 1
Deuteronomy 9:29நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்த இவர்கள் உமது மக்களும் உமது சொந்தமுமாக இருக்கிறார்களே என்று விண்ணப்பம்செய்தேன்.
Joshua 24:17நம்மையும் நம்முடைய முற்பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா மக்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய யெகோவா தானே.
2 Samuel 20:19இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் யெகோவாவுடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
1 Kings 8:53கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.
Psalms 78:71கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, 1 தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் 1 தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, 1 அழைத்துக்கொண்டுவந்தார். 1