பிரசங்கி 11:10
நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 13:26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; 1 என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். 1
Psalms 25:7என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; 1 யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். 1
Psalms 39:6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; 1 வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். 1 யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 1
Proverbs 22:15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; 1 அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 1
Ecclesiastes 1:14சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் + 1:14 காற்றை சாப்பிடுவதைப் போல் இருக்கிறது.
2 Corinthians 7:1இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம். 1 பவுலின் சந்தோஷம்