Genesis 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
18அது உனக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய்.
Cross References
Genesis 3:6அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
Genesis 5:29“யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
Job 5:6தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; 1 வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. 1
Job 14:1“பெண்ணிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் 1 வருத்தம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 1
Psalms 90:7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து 1 உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம். 1
Ecclesiastes 1:2“மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான்.