Genesis 4:14
இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
13அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
Cross References
Genesis 9:5உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; அனைத்து உயிரினங்களிடத்திலும் மனிதனிடத்திலும் பழிவாங்குவேன்; மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
Leviticus 26:36உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
Numbers 35:19பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டவுடன் அவனைக் கொன்று போடலாம்.
Numbers 35:27பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்திற்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை.
2 Samuel 14:7வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
Job 21:14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், 1 உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை; 1