Hosea 6:3
அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 32:2மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; 1 பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 1
Job 29:23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, 1 பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். 1
Psalms 65:9தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; 1 தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; 1 இப்படி நீர் அதைத் திருத்தி, 1 அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 1
Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
Isaiah 5:6அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
Isaiah 44:3தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.