Isaiah 10:16
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Chronicles 32:21அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
Isaiah 5:17அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள்.
Isaiah 9:4மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
Isaiah 10:18அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
Isaiah 17:4அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோகும், அவனுடைய கொழுத்த உடல் மெலிந்துபோகும்.
Isaiah 29:5உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும்.