Isaiah 10:29
கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
28அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
30காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
Cross References
Joshua 18:25கிபியோன், ராமா, பேரோத்,
Judges 19:12அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் மக்களல்லாதவர்கள் இருக்கிற பட்டணத்திற்குப் போகக்கூடாது; அதற்கடுத்த கிபியாவரை போவோம் என்று சொல்லி,
1 Samuel 7:17அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
1 Samuel 13:2இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்காகத் தெரிந்துகொண்டான்; அவர்களில் 2,000 பேர் சவுலோடு மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், 1,000 பேர் யோனத்தானோடு பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற மக்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான்.
1 Samuel 13:23பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.
1 Samuel 14:4யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர்.