Isaiah 25:2
நீர் எங்களுடைய எதிரியின் நகரத்தை மண்மேடும், பாதுகாப்பான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் தலைநகரை நகரமாக இராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும்.
Cross References
Deuteronomy 13:16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட அனைத்தையும் முழுவதுமாக அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல் என்றென்றைக்கும் மண்மேடாயிருக்கக்கடவது.
Isaiah 13:21காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும், ஆந்தைகள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும்.
Isaiah 14:23அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். 1 அசீரியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
Isaiah 17:3பாதுகாப்பு எப்பிராயீமையும், அரசாட்சி தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் மக்களுடைய மகிமைக்கு சம்பவித்ததுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் சம்பவிக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
Isaiah 23:13கல்தேயருடைய + 23:13 பாபிலோன் தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
Isaiah 25:12அவர் உன் மதில்களுடைய உயர்ந்த பாதுகாப்பை கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.