Isaiah 25:4
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3ஆகையால் பலத்த மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான தேசங்களின் நகரம் உமக்குப் பயப்படும்.
Cross References
Job 5:15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், 1 பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார். 1
Psalms 12:5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, 1 அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1
Psalms 72:4மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, 1 ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 1
Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1
Psalms 119:31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; 1 யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும். 1
Isaiah 4:6பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.