Isaiah 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியிலுள்ள மக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 14:21பூமியெல்லாம் யெகோவாவுடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
Psalms 58:11அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், 1 மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
Psalms 63:6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, 1 இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 1
Psalms 77:2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; 1 இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; 1 என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. 1
Psalms 83:18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, 1 அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.
Psalms 130:6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட 1 அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 1