Isaiah 40:28
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
29சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகச்செய்கிறார்.
Cross References
Genesis 21:33ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
1 Samuel 2:10யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; 1 வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; 1 யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, 1 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, 1 தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள்.
Psalms 90:2மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1
Psalms 139:6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், 1 எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது. 1
Isaiah 40:21நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
Isaiah 55:8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று யெகோவா சொல்கிறார்.