Jeremiah 51:39
அவர்கள் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
38ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
Cross References
Psalms 13:3என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, 1 எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் 1 அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 1
Isaiah 21:4என் இருதயம் திகைத்தது; பயம் என்னை அதிர்ச்சியடையச் செய்தது; எனக்கு இன்பம் தந்த இரவு பயங்கரமானது.
Jeremiah 25:27நீங்கள் குடித்து, வெறித்து, வாந்தியெடுத்து, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்.
Jeremiah 51:57அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.
Daniel 5:30அன்று இரவிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.
Nahum 3:11நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய்.