யோபு 27:5
நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
God forbid that I should justify you: till I die I will not remove mine integrity from me.
In Context
Cross References
Deuteronomy 25:1“மனிதர்களுக்குள்ளே வழக்கு இருந்தால், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நீதிமன்றத்திற்கு வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் நியாயம் தீர்க்கவேண்டும்.
Job 13:15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், 1 அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன். 1
Job 29:14நீதியை அணிந்துகொண்டேன்; 1 அது என் ஆடையாயிருந்தது; 1 என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது. 1
Job 32:3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று நண்பர்களுக்கும் கிடைக்காதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று முடிவு செய்ததால், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.
Job 42:7யெகோவா இந்த வார்த்தைகளை யோபுடன் பேசினபின், யெகோவா தேமானியனான எலிப்பாசை நோக்கி: “உன்மேலும் உன் இரண்டு நண்பர்கள்மேலும் எனக்குக் கோபம் வருகிறது; என் ஊழியனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாகப் பேசவில்லை.
2 Corinthians 1:12உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.