John 17:11
நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 17:8கண்மணியைப்போல் என்னைக் காத்து. 1
Proverbs 18:10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 1 நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 1
Isaiah 64:2தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
Jeremiah 14:21உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும்.
Ezekiel 20:22ஆகிலும் நான் என்னுடைய கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என் பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன்.
Matthew 5:48ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.