Lamentations 2:4
பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; 1 எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, 1 கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; 1 மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:17நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
1 Samuel 28:16அதற்குச் சாமுவேல்: யெகோவா உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்?
2 Chronicles 34:25அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார்.
Job 16:12நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; 1 அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, 1 என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 1
Psalms 7:13அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; 1 தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். 1
Isaiah 51:17எழும்பு, எழும்பு, யெகோவாவுடைய கடுங்கோபத்தின் பாத்திரத்தை அவருடைய கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய்.