Luke 1:64
உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his mouth was opened immediately, and his tongue loosed, and he spake, and praised God.
In Context
Cross References
Exodus 4:15நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன்.
Psalms 51:15ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; 1 அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 1
Isaiah 12:1அக்காலத்திலே நீ சொல்வது: 1 “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; 1 நீர் என்னைத் தேற்றுகிறீர். 1
Ezekiel 3:27நான் உன்னுடன் பேசும்போது, உன்னுடைய வாயைத் திறப்பேன்; அப்பொழுது யெகோவாகிய ஆண்டவர் இன்னின்னதைச் சொன்னார் என்று அவர்களுடன் சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேட்காதவன் கேட்காமல் இருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
Ezekiel 33:22தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.
Matthew 9:33பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.