வெளிப்படுத்தின விசேஷம் 19:2
தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, 1 தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Read all of வெளிப்படுத்தின விசேஷம் 19
Cross References
Deuteronomy 32:35பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; 1 ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; 1 அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; 1 அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும். 1
2 Kings 9:7நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
Isaiah 25:1யெகோவாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது முந்தின ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
Revelation 15:3அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: 1 “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, 1 தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; 1 பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 1
Revelation 17:1ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
Revelation 18:3அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; 1 பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; 1 பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான். 1