Lamentations 1:9
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; 1 தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; 1 ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; 1 தேற்றுபவர்கள் இல்லை; 1 யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; 1 பகைவன் பெருமைபாராட்டினானே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:7அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
Exodus 4:31மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.
Deuteronomy 32:27நான் எதிரியின் கோபத்திற்கு பயப்படாமல் இருந்தேன் என்றால், 1 நான் அவர்களை மூலைக்குமூலை சிதறடித்து, 1 மனிதர்களுக்குள் அவர்களுடைய பெயர் அழிந்துபோகச்செய்வேன் என்று சொல்லியிருப்பேன். 1
1 Samuel 1:11சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.
2 Kings 14:26இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார்.
Psalms 25:18என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, 1 என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 1