Proverbs 24:12
அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், 1 இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? 1 உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? 1 அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 16:7யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
Job 34:11மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, 1 அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார். 1
Psalms 17:3நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, 1 இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் 1 ஒன்றும் காணாமலிருக்கிறீர்; + 17:3 மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை.என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன். 1
Psalms 62:12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! 1 தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.
Psalms 121:3உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; 1 உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 1
Proverbs 5:21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1