ரோமர் 9:20
அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 16:3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 1 இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 1
Job 36:23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தகுந்தவன் யார்? 1 நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 1
Job 40:2“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்? 1 தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார். 1
Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Isaiah 29:16ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
Isaiah 64:8இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.